| | -
அத்தியாயம் - 3
-
இந்திய
அமைதிகாக்கும்
படையினர் ஈழத்தில்
நிலைகொண்டிருந்த
காலப்பகுதிகளில்,
அவர்கள் மேற்கொண்டிருந்த
இரகசிய நடவடிக்கைகள்
பற்றிக் கடந்த
வாரங்களில் பார்த்திருந்தோம்.
ஈழத் தமிழர்களின்
எதிர்காலச் சந்ததியினரின்
உணர்வுகளை மழுங்கடிக்கும்
நோக்கத்துடன்,
இலங்கையின் வடக்குக்
கிழக்கில் உள்ள
காடுகளிலும்,
கிராமங்களிலும்
இலட்சக்கணக்கான
கஞ்சாச் செடிகளை
உருவாக்கும்
இரகசியத் திட்டம்
ஒன்றை இந்தியப்
படையினரின் விஷேட
பிரிவு ஒன்று
மேற்கொண்டிருந்தது
பற்றி கடந்த இதழில்
விவாக ஆராய்ந்திருந்தோம்.
-
-

-
இலங்கையைப்
பொறுத்தவரையில்,
இதேபோன்ற இரகசிய
இராணுவ நடவடிக்கைகள்
பலவற்றை இந்திய
இராணுவத்தினர்
திட்டமிட்டிருந்தார்கள்.
மிகவும் இரகசியமாகத்
திட்டமிடப்பட்டிருந்த
இத்தகைய நடவடிக்கைகளில்
சில நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
சில வெளித்தெரியவராமல்
மறைக்கப்பட்டுவிட்டன.
ஈழத் தமிழர்களின்
விடுதலைப் போராட்டத்திற்கு
எதிரான இந்தியாவின்
இரகசியப் புலனாய்வு
நடவடிக்கைகளைப்
பற்றிப் பார்பதற்கு
முன்னால், இலங்கையில்
இந்திய இராணுவத்தினர்
மேற்கொண்ட சில
முக்கிய இராணுவ
நடவடிக்கைகள்
பற்றி இத் தொடரில்
ஓரளவு மேலோட்டமாக
ஆராய்வது பொருத்தமாக
இருக்கும் என்று
நினைக்கின்றேன்.
-

இராணுவ
நடவடிக்கைகள்:
இலங்கையைப் பொறுத்தவரையில்
இந்த நூற்றாண்டில்
இந்தியாவின்
இராணுவத் தலையீடுகள்
முதன்முதலில்
1971ம் ஆண்டு ஆரம்பமாகி
இருந்தன என்று
கூறலாம். ஜே.வீ.பி.யை
அடக்குவதற்கு
என்று ஸ்ரீலங்கா
அரசாங்கத்தின்
கோரிக்கையின்
பெயரில் இந்தியப்படைகள்
இலங்கைக்கு வந்திருந்தன.
அதன் பின்னர்
1987ம் ஆண்டில் இலங்கை-இந்திய
ஒப்பந்தத்தை
அமுல்படுத்துவதற்கு
என்று கூறி இந்தியப்
படைகள் இலங்கைக்கு
வந்திருந்தன.
இந்த இரண்டு நடவடிக்கைளும்
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்
அனுமதியுடன்
அரசாங்கத்தின்
அழைப்பின் பெயரிலேயே
மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேபோன்று புலிகள்
யாழ் குடாவைக்
கைப்பற்ற மேற்கொண்டிருந்த
ஓயாத அலைகள்-4 நடவடிக்கைகளின்
போது, யாழ் குடாவில்
முற்றுகைக்கு
உள்ளாகி இருந்த
ஸ்ரீலங்காப்
படையினரைக் காப்பாற்ற
இந்தியப் படையினர்
ஒரு நடவடிக்கையை
மேற்கொள்ளத்
தயாராகி இருந்தார்கள்.
- பலாலித்
தளத்தைக் கைப்பற்றி
ஒரு நாள் முழுவதும்
அதனைத் தக்கவைத்தபடி
ஸ்ரீலங்காப்
படையினரை வெளியேற்றுவதற்கு
இந்தியப் படையினர்
திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் இறுதி நேரத்தில்
பலவேறு காரணங்களினால்
அந்த நடவடிக்கை
கைவிடப்பட்டன.
அந்த நடவடிக்கையும்
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்
அழைப்பின் பெயரிலேயே
மேற்கொள்ளுவதற்கு
திட்டமிடப்பட்டிருந்தது.
அதேவேளை, ஸ்ரீலங்கா
அரசின் அனுமதி
இல்லாமல் இலங்கையில்
படைநடவடிக்கைகள்
எடுப்பதற்கான
திட்டங்கள் சிலவற்றையும்
இந்தியப் படையினர்
முன்னர் வகுத்திருந்தார்கள்.
அவற்றில் சிலவற்றை
நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்.
1987ம் ஆண்டின் நடுப்பகுதியில்
ஸ்ரீலங்காப்
படைகள் யாழ்ப்பாணம்
வடமாராட்சியில்
*ஒப்பரேசன்லிபரேசன்*|
நடவடிக்கையை
மேற்கொண்டிருந்த
போது, யாழ் மக்களுக்கு
விமானம் மூலம்
உணவுப் பொட்டலங்களைப்
போடும் *ஒப்பரேசன்
பூமாலை* நடவடிக்கை
04.06.1987 அன்று இந்தியப்
படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்
அனுமதி இன்றி
இலங்கையில் இந்தியா
மேற்கொண்ட ஒரு
அதிரடி இராணுவ
நடவடிக்கை இது.
இரகசியத்
திட்டங்கள்:
இது போன்று இலங்கை
அரசுக்கு எதிராக
இலங்கை மண்ணில்
இராணுவ நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவதற்கு
இந்தியா பல இரகசியத்
திட்டங்களை வகுத்திருந்த
விடயம் பின்நாட்களிலேயே
வெளிவந்து அதிர்ச்சியை
ஏற்படுத்தியிருந்தது.
80 களின் ஆரம்பத்தில்
ஈழப் போராளிகளை
அடக்குவதற்கு
என்று ஜே.ஆர். அரசாங்கம்
மேற்குலக நாடுகளின்
பக்கம் சாய ஆரம்பித்ததைத்
தொடர்ந்து, இலங்கையை
வழிக்குக் கொண்டு
வருவதற்கும்,
இலங்கைமீது ஆக்கிரமிப்பை
மேற்கொள்வதற்கும்
இந்தியா பல திட்டங்களை
வகுத்திருந்தது.
இனப்பிரச்சினையைக்
காரணம் காண்பித்து
இந்தியாவின்
ஜென்ம விரோதிகளான
அமெரிக்கா, பாக்கிஸ்தான்,
சீனா, இஸ்ரேல்
போன்ற நாடுகளிடம்
இருந்தெல்லாம்
ஸ்ரீலங்கா அரசாங்கம்
ஆயுதம் மற்றும்
பல்வேறு உதவிகளையெல்லாம்
பெற ஆரம்பித்திருந்ததைத்
தொடர்ந்து, இலங்கையை
ஆக்கிரமிக்கும்
நோக்கம் இந்திய
அரசியல் தலைமையிடம்
வலுப்பெற ஆரம்பித்திருந்தது.
அதற்கான ஒரு
இராணுவத் திட்டமும்
தீட்டப்பட்டது.
-

அதேவேளை, இந்திய
இராணுவத்தின்
தளபதி பொறுப்பை
கிருஷ்ணசுவாமி
சுந்தர்ஜீ புதிதாக
ஏற்றுக்கொண்டதைத்
தொடர்ந்து இந்தியப்
படைகள் நவீனமயப்படுத்தப்பட்டன.
புதிய போர் யுக்திகள்
வகுக்கப்பட்டன.
நவீன ஆயுதங்கள்
வாங்கிக் குவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து
இந்திய இராணுவம்
தான் புதிதாகப்
பெற்றிருந்த
தனது பலத்தைப்
பரீட்சித்துப்பார்க்க
ஒரு இடத்தைத்
தேடிவந்தது. அதேவேளை
இலங்கை மீது ஒரு
ஆக்கிரமிப்பை
மேற்கொள்ளவேண்டிய
அரசியல் தேவையும்
உருவாகி இருந்ததால்,
இலங்கைத் தீவை
தனது பலத்தைப்
பரீட்சித்துப்
பார்க்கும் ஒரு
நிலையமாகத் தெரிவுசெய்து
கொண்டது. இலங்கை
மீது இராணுவ நடவடிக்கை
எடுக்கும் பொறுப்பு
இந்தியப் படைத்தளபதி
சுந்தர்ஜீயிடம்
ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை மீது மேற்கொள்ளப்பட
இருந்த படையெடுப்பிற்கு
யார்யார் தலைமை
தாங்குவது, எந்தெந்த
இலக்குகளைத்
தாக்குவது, எந்தெந்தப்
படைப்பிரிவுகள்
தாக்குதல் நடவடிக்கைகளில்
பங்குபற்றுவது
என்றெல்லாம்
திர்மானிக்கப்பட்டிருந்தது.
இலங்கை மீது மேற்கொள்ளப்பட
இருந்த தாக்குதல்
நடவடிக்கைக்கு
*திரிஷக்தி* என்று
பெயரும் சூட்டப்பட்டிருந்தது.
ஏதோ காரணத்திற்காக
இந்த நடவடிக்கை
இறுதி நேரத்தில்
கைவிடப்பட்டது.
ஸ்ரீலங்காவிற்கான
பணி: இதேபோன்று
இலங்கைக்கு எதிராக
மேற்கொள்வதற்கென்று
மற்றொரு நடவடிக்கையும்
திட்டமிடப்பட்டிருந்தது.
ராஜீவ் காந்தியின்
பணிப்புரையின்
பெயரில் இந்த
நடவடிக்கை மேற்கொள்வதற்கு
திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்காக
இந்திய இராணுவத்தின்
பல்வேறு படை அணிகளைக்
கொண்ட தனிப் பிரிவொன்றும்
1987ம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
MO-SL
என்று இந்த இராணுவ
நடவடிக்கைக்குப்
பெயரிடப்பட்டிருந்தது.
MO-SL என்றால்
ஸ்ரீலங்காவிற்காக
பணி (Mission
Of Sri Lanka)
என்று அர்த்தம்.
-
 87ம்
ஆண்டு ஜுன் மாதம்
4ம் திகதி இந்தியப்
படையினர் இலங்கையில்
மேற்கொண்ட *ஒப்பரேசன்
பூமாலை*(Operation
Poomalai)
நடவடிக்கைக்கு
ஸ்ரீலங்காப்
படையினர் எதிர்ப்பை
வெளிப்படுத்தியிருந்தால்
இந்தியப் படையின்
இந்த விஷேட பிரிவினர்
களமிறக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால் ஒப்பரேஷன்
பூமாலை நடவடிக்கையின்போது
ஸ்ரீலங்காப்
படையினர் எதுவுமே
செய்யமுடியாது
அடங்கிப்போயிருந்ததால்
அதற்கான சந்தர்ப்பம்
இல்லாமல் போயிருந்தது.
இதேபோன்று, இலங்கையில்
இந்தியா மேற்கொள்ளத்
திட்டமிட்டிருந்த,
மேற்கொண்ட மேலும்
சில இரகசிய நடவடிக்கைகள்
பற்றி அடுத்த
வாரம் பார்ப்போம்.
தொடரும்…
நன்றி-நிலவரம்
| |