அத்தியாயம் - 1
சமாதானப் பொறியில் இருந்து "மகிந்தவின் புண்ணியத்தில்" தமிழர் தேசம் மீண்டுள்ளது. பாக்கு நீரிணையில் கூட்டு ரோந்து, நவீன ராடர்கருவிகள் உதவிகள், விமான எதிர்ப்பு ஏவுகணை உதவிகள் என்று இந்தியாவின் உதவிகள் ஸ்ரீலங்காவிற்கு கிடைக்கலாம் என்ற பேச்சடிபட ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில்;, ஐ.நா. படைகள் வடிவத்தில் இந்தியப் படைகள் மறுபடியும் ஈழத்திற்கு அமைதிகாக்க வரலாம் என்றும் ஆருடங்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியா தொடர்பான சில முக்கியமாக விடையங்களை நாங்கள் ஆராயவேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.


இந்திய மாயை:
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா தனது துரோக நடவடிக்கைகளை எப்பொழுது ஆரம்பித்திருந்தது என்பதுடன், ஈழத் தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற வரலாற்றுத் துரோகங்கள் பற்றியும் இந்தத் தொடரில் தொடர்ந்து விரிவாக ஆராய வேண்டி இருக்கின்றது. இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னால் உள்ள பல இரகசியங்கள் பற்றியும், இந்தியப் புலனாய்வுத் துறையான 'றோ' (RAW-Research and analyse Wing) பிரிவின் மிகவும் கேவலமான சதிகள் பற்றியும் இந்தத் தொடரில் விவாகப் பார்க்க உள்ளோம்.
ஈழத்தமிழ் மக்களின் ஒரு பகுதியினரிடம் இந்தியா பற்றிய மாயை இன்னமும் இருந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. 'இந்தியா ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்துதான் செயற்பட்டு வருகின்றது, எதிர்காலத்திலும் இந்தியா அப்படித்தான் செயற்படும்' என்று எம்மில் பலர் இப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

............. ......
எமது அண்டைய நாடு என்கின்ற வகையிலும், எமது பிரச்சனையின் முக்கிய பங்காளி என்கின்ற வகையிலும், இந்தியா பற்றி நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இந்தியாவின் நகர்வுகள், ஒவ்வொரு அசைவுகளையும் கவனமாக அவதானித்து வைக்கவேண்டிய அவசியம் ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் இருக்கத்தான் செய்கின்றது.
அந்த வகையில் ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ பரிமாணங்களையும், அதன் சுய ரூபத்தையும் தமிழ் மக்களுக்கு அப்பட்டமாக்கும் வகையில் இந்தத் தொடரின் இனி வரும் அத்தியாயங்கள் அமைய உள்ளன.
இந்தியா ஈழத்தமிழர்களின் உண்மையான பாதுகாவலனா? ஈழத் தமிழர்களில் இந்தியா எந்த அளவிற்கு அக்கறை காண்பிக்கின்றது? ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தையிட்டு இந்தியா எத்தகைய கவலையைக் கொண்டிருக்கின்றது?
இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முகமாக, இந்தியாவும் ஈழத் தமிழரும் தொடர்பான ஒரு சம்பவத்தை முதலில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

----------------
இரகசிய நடவடிக்கை
80களின் பிற்பகுதியில், இந்தியப் படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் அது.
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புக்கள், இந்தியாவின் முப்படைகள், ஆயிரக்கணக்கான ஒட்டுக் குழுக்கள் என்பன, தமிழீழ மக்கள் மீது பாரிய ஆக்கிரமிப்பொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
தமிழீழம் ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் கைதிகளாகவே நடத்தப்பட்டார்கள். வகைதொகையின்றி தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்கள். கொள்ளைகள், கொலைகள் பரவலாகவே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்தியப்படையினர் வடக்கு கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி வரதராஜப் பெருமாளை முதலமைச்சராக நியமித்திருந்தார்கள். தமிழ் பேசும் இளைஞர்களைக் கொண்டு மக்கள் தொண்டர் படை என்று ஒரு படையை அமைத்து, அவர்களுக்கு இந்தியப் படை ஆயுதப் பயிற்சியை வழங்கிக்கொண்டிருந்து.
இப்படி பல காரியங்கள் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், மறுபக்கத்தில் மற்றொரு முக்கியமான காரியத்தை இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்தார்கள். மிகவும் இரகசியமாக, அதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கு முழுவதையும் குறிவைத்து பரந்த அளவில் இந்தக் காரியத்தை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.

---------------
கஞ்சாச் செய்கை.
வடக்கு கிழக்கு முழுவதிலும் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் கஞ்சா விதைகளை தூவி, கஞ்சா செடிகளை உருவாக்கும் காரியத்தைத்தான் அவர்கள் அதி சிரத்தையுடன் செய்துகொண்டிருந்தார்கள்.
வடக்கு கிழக்கில் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கஞ்சாச் செடிகளை இந்தியப் படைகள் உருவாக்கினார்கள்.
இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் கஞ்சாச் செடிகளை இத்தனை ஆர்வமாக உருவாக்குவதற்கு என்ன காணம்?

அடுத்த வாரம் பார்ப்போம்...

நன்றி-நிலவரம்                        அத்தியாயம் - 2

 
   

:: Universal Currency Converter ::


நாணயமாற்று

this amount
பெறுமதியை வழங்கவும்

of this type of currency
மாற்றும் நாணயம்

into this type of currency.
மாற்றவேண்டிய நாணயம்
 


 

 



Copyright 2000-2007 Tamiowebradio.com