மகசீன் சிறைச்சாலையில் இன்று காலை பதினொரு மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அண்மையில் மகசீன் சிறைச்சாலைக்கு நியமிக்கப்பட்ட எமில் நிறஞ்சன் என்ற அதிகாரியின் கடும் போக்கிற்கு எதிராக இன்று சிங்களக் கைதிகள் அதிகாரிகள் மீது பொல்லுகள் கல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்நடவடிக்கைக்கு எதிராக கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 15கைதிகள் வரையில் காயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இத்தாக்குதலில் தமிழ்க் கைதிகளும் பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலமை மிகவும் பதட்டமான நிலையில் இருப்பதாகவும் தற்போது மகசீன் சிறைச்சாலை புகைமண்டலமாகக் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நேரடியான சாட்சியமாக கைதி ஒருவரின் குரலில் கிடைத்த உடனடிச் செய்தியைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.