எங்கள் பிள்ளைகளை பாதுகாருங்கள் - தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோள்
- Details
- Published on Thursday, 16 February 2012 09:05
2012தை மாதம் 24ம் திகதி புதியமகசீன் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் சிங்களக் கைதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தில் புதிய மகசீன் சிறைச்சாலையிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி களுத்துறைச் சிறைச்சாலைக்கு 199 தமிழ் அரசியல் கைதிகள் இடம் மாற்றப்பட்டனர்.
அதன் பின்னர் இடநெருக்கடி காரணமாக கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலையில் இருந்து 2 தொகுதிகளாக 65 பேர் கழுத்துறைச் சிறைச்சாலைக்கு இடம்மாற்றப்பட்டனர். இவ்வாறு இடம்மாற்றப்பட்ட 265 பேர் கழுத்துறைச் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் 13-02-2012 , 14-02-2012 இல் இரண்டு தொகுதிகளாக நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் ஆகியவற்றுக்கு 120 பேர் புதிய மகசீன் சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டு மிகுதியான 142 பேர் கழுத்துறைச் சிறைச்சாலையில் உள்ளனர்.
Read more: எங்கள் பிள்ளைகளை பாதுகாருங்கள் - தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோள்
அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்
- Details
- Published on Wednesday, 08 February 2012 18:20
இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுக்கும் வேண்டுகோள் செய்தியிது. உங்களால் இயன்றளவு எல்லா இடங்களுக்கு அனுப்பி எமது உறவுகளின் துயரத்தை உலகுக்குத் தெரிவித்து அவர்களது விடுதலைக்கு ஆதரவு தாருங்கள்.
அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தெரியப்படுத்திக் கொள்வது:-
தற்போதைய காலச் சூழ்நிலையில் எமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு எமது வழக்குகளை வடக்குக் கிழக்கு நீதி மன்றங்களுக்கு மாற்றம் செய்து பிணையில் செல்வதற்கு தங்கள் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தோடு நேரடியாக யுத்தத்தில் பங்குபற்றிய பலரைப் புனர்வாழ்வு வழங்கி விடுவிப்பது போன்று எம்மையும் ஏதேனும் ஒரு நிபந்தனையிலாவது விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.
எம்மில் பெரும்பாலானோர் குடும்பத் தலைவர்களாகவும், குடும்பப் பொறுப்பு வகிக்க வேண்டியவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் சிறையில் பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் எமது பிள்ளைகளின் கல்வி நிலை அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற அதேவேளை எமது பிள்ளைகள் உளநலப் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். எமது சட்டத்தரணிகளும் எமது வழக்குகளை முடிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எமது வழக்குகள் கால காலமாய் தொடர்ந்து தவணையிடப்பட்ட வண்ணம் உள்ளன.
Read more: அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்
மகசீன் சிறையில் கைதிகள் மீதான அதிகாரிகளின் தாக்குதலில் பலர் மயக்கமடைந்துள்ளனர்
- Details
- Published on Tuesday, 24 January 2012 13:11
தமிழ் அரசியல் கைதிகள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
- Details
- Published on Tuesday, 24 January 2012 13:13
மகசீன் சிறைச்சாலையில் கலவரம் 15பேர் வரையில் காயம்
- Details
- Published on Tuesday, 24 January 2012 07:56



மகசீன் சிறையின் நிலமைகள் கடும் மோசமுற்றிருப்பதாக தற்போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் மீது கண்ணீர்ப்புகை மேற்கொள்ளப்பட்டமையால் கைதிகள் மயக்கமுற்ற நிலமையில் இருப்பதாகவும் நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிய வருகிறது.தற்போதைய நிலமை தொடர்பாக கிடைத்த ஒலிப்பதிவு பிந்திய இணைப்பு.